சபரிமலை நடை திறப்பு! ஆனி மாத பூஜை துவக்கம்!!

0
340
#image_title

சபரிமலை நடை திறப்பு!! ஆனி மாத பூஜை துவக்கம்..

கேரளாவில் திருவனந்தபுரத்தில் சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவில் உள்ளது. பெண்கள் அனுமதிக்கப்படாத ஒரு கோவில் என்று இதை கூறுவார்கள்.

சபரிமலை அய்யப்பன் சுவாமி திருக்கோவில் ஆனி மாத பூஜைக்காக இன்று நடை திறக்கப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இருக்கும் சபரிமலை அய்யப்பன் திருகோவில் இன்று மாலை 5.30 மணியளவில் திறக்கப்பட உள்ளது.

மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் குத்துவிளக்கு ஏற்றி தீபாராதனை காட்டி நடையை திறந்து வைக்கிறார். இதனை அடுத்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும்.

சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பதினெட்டாம் படி வழியாக அனுப்பப்படுவார்கள். இன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது என்றும், கோவிலின் கருவறை மற்றும் சன்னிதானத்தின் சுற்றுப்புற பகுதியை தூய்மைப் படுத்தும் பணி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

வரும் 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 5 நாட்களுக்கு கோவிலில் வழக்கமான பூஜைகள் நடைபெறும். நிர்மாலய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, படி பூஜை, களபாபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம் ஆகிய பூஜைகள் நடைபெறும்.

இதன் பிறகு வருகின்ற 20-ம் தேதி அரிவராசனம் பாடல் பாடப்பட்டு அத்தாழ பூஜைக்கு பிறகு இரவு 10 மணியளவில் நடை மூடப்படும்.

சபரிமலை கோவிலுக்கு அய்யபனை தரிசனம் காண விரும்பும் நபர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இதற்கான முன்பதிவு டிக்கெட்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.

 

Previous articleதமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது!!
Next articleஇராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் மீண்டும் அவதூறு வழக்கு! சம்மன் அனுப்பிய நீதி மன்றம்!