தமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது!!

0
187
#image_title

தமிழகத்தில் புதிய சாதனையை படைத்த ரெனால்ட் கார் நிறுவனம்! வெற்றிகரமாக 10 லட்சம் கார்கள் உற்பத்தி செய்தது!

 

பிரபல ரெனால்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தனது 10 லட்சமாவது காரை உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்பி சாதனை படைத்துள்ளது.

 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ரெனால்ட் நிறுவனம் தமிழக உற்பத்தி ஆலையில் 10 லட்சமாவது யூனிட்டை உற்பத்தி செய்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.

 

ரெனால்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரெனால்ட் எஸ்.ஏ.எஸ் பிரான்ஸின் துணை நிறுவனமாகும். சென்னையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் ஓரகடத்தில் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமெடேட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியா ரெனால்ட் நிறுவனம் கார்களை உற்பத்தி செய்து வருகின்றது.

 

இதையடுத்து ரெனால்ட் இந்தியா நிறுவனத்தின் ஆபரேஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான வெங்கட் ராம் அவர்கள் “ரெனால்ட் நிறுவனம் ஆண்டுக்கு 4.80 லட்சம் கார்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்தியா முழுவதும் 9 லட்சம் வாடிக்கையாளர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த நிலையில் ரென்ல்ட் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது ஆலையில் 10 லட்சமாவது யூனிட்காரை உற்பத்தி செய்துள்ளோம்.

 

அசெம்பிளி லைனில் இருந்து 10 லட்சமாவது காரை குறிக்கும் வகையில் சிவப்பு நிறம் உடைய “கிகர்” காரை நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் முறைப்படி கொடியசைத்து விற்பனைக்கு அனுப்பி வைத்தனர். நிறுவனமானது உற்பத்தி, தொழால்நுட்பம், திறமை ஆகியவற்றில் கணிசமான முதலீடுகளை செய்து வலுவான உற்பத்தி உட்கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. இது மிக உயர்ந்த தரம் மற்றும் செயல் திறனை உறுதி செய்துள்ளது.

 

தற்பொழுது ரெனால்ட் இந்தியா நிறுவனம் மூன்று பயனிகள் பயணிக்கக் கூடிய க்விட், கிகர், ட்ரைபர் ஆகிய கார்களை ஆசிய பசுபிக், தெற்காசிய பகுதி ஒத்துழைப்பு சங்கம்(சார்க்), தென்னாப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் உள்பட 14 பகுதிகளுக்கு விற்பனை செய்து வருகின்றது.

 

இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்து வரும் ரெனால்ட் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்சமாவது கார் உற்பத்தி செய்தது முக்கியமான மைல் கல் ஆகும். இது இந்திய சந்தையில் எங்களது அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றது. மேலும் இது வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றது” என்று கூறியுள்ளார்.