தேர்தல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவு!

0
226

தேர்தல் காரணமாக ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து உத்தரவு!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்கலுக்கான சட்டசபை தேர்தல் தேதியை கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, வருகிற 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் பஞ்சாப், உத்தரகாண்ட் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாகவும். மணிப்பூரில் பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. அதில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு நடை பயணம், பொதுக்கூட்டம் மற்றும் இரு சக்கர வாகன பேரணி உள்ளிட்டவை நடத்த தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்த தடைகள் நேற்று வரை அமலில் இருந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தலைமையில் தேர்தல் கமிஷனர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் வாகன பேரணிகள், நடை பயணம், மற்றும் ஊர்வலங்களுக்கான தடைகள் வருகிற 11-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் திறந்தவெளி பிரசார பொதுக்கூட்டங்களில் 1000 பேர் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் ஐம்பது சதவீதம் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.

இதைப்போல வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பதற்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கு பதிலாக 20 பேர் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Previous articleஇன்று தாக்கலாகும் மத்திய நிதிநிலை அறிக்கை! 5 மாநில சட்டசபை தேர்தல் எதிரொலி இருக்குமா?
Next articleஅதள பாதாளத்திற்கு சென்ற நோய்த்தொற்று உயிரிழப்பு! தமிழக மக்கள் மகிழ்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here