அரசு பள்ளிகளுக்கு உத்தரவு மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அரசு பள்ளிகளில் ஆண்டு விழா என்பது மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மாணவ, மாணவிகளின் கொண்டாட்ட நாளாகும். அந்த வகையில் தமிழக அரசு ஆண்டு விழா நாட்களை மேலும் சிறப்பிக்க 2023-24ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக சட்டமன்றத்தில் நடந்த மானியக் கோரிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாமல்
கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களில் தங்களுடைய திறமைகளை வெளிகொண்டு வர வேண்டும், இதன் பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது என்றார். இதற்காக நடப்பாண்டு 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
சிறப்பான அரங்கம் அமைத்து சிறந்த ஒளி, ஒலி அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஆண்டு விழா ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மை குழுக்கள் உடன் தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவை நடத்தி முடித்து விட வேண்டும். இன்னும் 7 நாட்கள் தான் உள்ளது என்பது குறிப்படத்தக்கது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.