வடகொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கிம் ஜாங் உன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.கடுமையான இந்த புதிய நடவடிக்கையானது வியாழக்கிழமை நள்ளிரவில் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவுடனான வடகொரியாவின் எல்லையிலிருந்து அரை மைல் தூரத்திற்குள் தென்படும் எவரையும் கண்டதும் சுட்டுக் கொல்ல நாட்டின் ராணுவத்தினர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே, வடகொரிய பொதுமக்கள் சீன எல்லை அருகே சென்றதற்கான காரணத்தைப் பொருட்படுத்தாமல் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஹொரியோங் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.