முகத்தை வெள்ளையாக்க உதவும் ஆர்கானிக் க்ரீம்! இதை எவ்வாறு தயார் செய்வது!

0
76
#image_title

முகத்தை வெள்ளையாக்க உதவும் ஆர்கானிக் க்ரீம்! இதை எவ்வாறு தயார் செய்வது!

முக அழகை கெடுக்கும் கருமை நீங்கி முகம் வெள்ளையாகவும், அழகாகவும் மாற ஆர்கானிக் க்ரீம் செய்து பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)துளசி
2)பால்
3)குங்குமப்பூ

செய்முறை:-

முதலில் 1/4 கைப்பிடி அளவு துளசியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு கிண்ணத்தில் 1/4 டம்ளர் காய்ச்சாத பால் சேர்த்து அரைத்த துளசி விழுதை சேர்த்து கலக்கவும்.

பிறகு சிறிது குங்குமப் பூ சேர்த்து நன்கு மிக்ஸி செய்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வரவும். இந்த க்ரீமை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகக் கருமை நீங்கி முகம் வெள்ளையாகும்.

தேவையான பொருட்கள்:-

1)உருளைக்கிழங்கு
2)தேன்

செய்முறை:-

ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு மைய்ய அரைக்கவும்.

பின்னர் ஒரு கிண்ணத்திற்கு அரைத்த பேஸ்டை சேர்த்து ஒரு தேக்கரண்டி தேன் கலந்து க்ரீம் பதத்திற்கு கலக்கவும். இந்த க்ரீமை முகம் முழுக்க தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகக் கருமை நீங்கி முகம் வெள்ளையாகும்.