பாதுகாப்பான தடுப்பூசியை உருவாக்குவதே எங்கள் நோக்கம்

Photo of author

By Parthipan K

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதால் பரிசோதனை பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.  ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் பரிசோதனைகளை இங்கிலாந்து, அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இதனால் கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், ரஷியாவின் ’ஸ்புட்னிக் வி’ தடுப்பூசியின் இறுதிக்கட்ட பரிசோதனை இன்று தொடங்கியுள்ளது.
இந்த இறுதிகட்ட பரிசோதனையில் 31 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. பல நாடுகள் பல்வேறு கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி வரும் நிலையில் அதன் பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களிடம் எழத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்யாத எந்த ஒரு கொரோனா தடுப்பூசியும் மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாது என உலக சுகாதார அமைப்பின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.