மூன்றாவது டெஸ்ட் தடுமாற்றத்தில் பாகிஸ்தான்

0
110

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி பெரும்பாலான நேரங்களில் மழை பெய்ததால் போட்டி டிராவில் முடிந்தது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ராரி பர்ன்ஸ் ம்ற்றும் சிப்லி 12 ரன்கள் எடுத்த போது ராரி பர்ன்ஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் களமிறங்கிய கிரவ்லி  தொடக்கம் முதல்லே அதிரடியாக விளையாடினர். அபாரமாக ஆடி தனது சதத்தையும் பூர்த்தி செய்தார். நேற்று இரண்டாவது நாள் தொடங்கிய நிலையில் கிரவ்லி மற்றும் பட்லர் ஜோடி அபாரமாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 359 ரன்கள் சேர்த்தனர். கிரவ்லி 267 ரன்களும் பட்லர் 152 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் 583 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 24 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து விளையாடி வந்தது. சற்றுமுன் தொடங்கிய 3 வது நாள் ஆட்டத்தில் 30 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

Previous articleதமிழகத்தில் இ-பாஸ் ரத்து செய்ய அதிக வாய்ப்பு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்
Next articleஇவ்வளவு பெரிய வீட்டிற்கு சொந்தக்காரராக யோகிபாபு?