காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினமாக ஆகஸ்ட் 30 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகெங்கும் காணாமல்போன பல்லாயிரக் கணக்கானோர் மற்றும் அவர்கள் பற்றிய தகவல்களுக்காக காத்துக்கொண்டிருக்கும் அவர்களது உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தத் தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பாக பாகிஸ்தான் வம்சாவளியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.