தளபதி68 திரைப்படத்திற்காக தாய்லாந்து கிளம்பிய நடிகர் விஜய்!

0
75
#image_title

தளபதி68 திரைப்படத்திற்காக தாய்லாந்து கிளம்பிய நடிகர் விஜய்!

தளபதி68 திரைப்படத்திற்காக நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது தாய்லாந்து கிளம்பி சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி உலக அளவில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், திரிஷா, அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

லியோ திரைப்படம் உலக அளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் சில தினங்களுக்கு முன்னர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள தளபதி68 திரைப்படத்திற்காக தாய்லாந்து கிளம்பி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கும் 68வது திரைப்படமான தளபதி68 திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்குகிறார். தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசை அமைக்கிறார். மேலும் ஏஜிஏஸ் நிறுவனம் தளபதி68 திரைப்படத்தை தயாரிக்கின்றது.

தளபதி68 திரைப்படத்தின் பூஜை வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவில் தளபதி 68 திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்கள், வேலை செய்யவுள்ள கலைஞர்கள் ஆகியோரை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதன்படி தளபதி68 திரைப்படத்தில் நடிகர்கள் பிசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, அஜ்மல் அமீர், லைலா, ஜெயராம், விடிவு கணேஷ், ஜெயராம் ஆகியோர் நடிக்கின்றனர். இதையடுத்து ஏற்கனவே இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் படக்குழுவினர் தாய்லாந்து கிளம்பி சென்றனர்.

இந்நிலையில் இன்று(நவம்பர்3) அதிகாலை நடிகர் விஜய் அவர்களும் தளபதி68 திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு தாய்லாந்து கிளம்பி சென்றுள்ளனர். தளபதி68 திரைப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் ஷூட் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.