பப்பாளி அல்வா! ஒரு முறை சுவைத்து பாருங்கள்!

0
234

பப்பாளி அல்வா! ஒரு முறை சுவைத்து பாருங்கள்!

தேவையான பொருட்கள் : பப்பாளிப் பழ துண்டுகள் மூன்று கப், சர்க்கரை முக்கால் கப் ,நெய் நான்கு டீஸ்பூன், காய்ச்சிய பால் அரை கப், ஏலக்காய் பொடி ஒரு டீஸ்பூன்,முந்திரி எழு,பாதாம் பருப்பு எழு,உப்பு தேவையான அளவு.

செய்முறை : முதலில்முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து சிறிய துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள். பாதம் பருப்பை மெலிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.

அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு பப்பாளி பழ துண்டுகளை போட்டு வதக்க வேண்டும். அதில் பச்சை வாடை போனதும் காய்ச்சிய பாலை ஊற்றி நன்கு வேக விட வேண்டும்.

பிறகு பப்பாளி குழையும் போது, அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். பப்பாளி இயல்பாகவே இனிப்பு என்பதால் சர்க்கரை அளவை குறைத்துக் கொள்ளலாம். அல்வா சுண்டிவரும்போது மீதமுள்ள நெய்விட்டு கிளறிவர வேண்டும்.பாத்திரத்தில் அல்வா ஒட்டாமல் வரும்போது முந்திரி, பாதாம், ஏலக்காய் பொடி தூவி கிளறி இறக்க வேண்டும்.

 

Previous articleமன அழுத்தம் ஏற்பட காரணம் என்ன?..அதன் முக்கிய காரணங்கள் இதோ தெரிஞ்சுக்கோங்க!!
Next articleசூடாக சுவையாக வாங்க சாப்பிடலாம் வெங்காய பிரியாணி!!..