உடல் எடையை குறைக்க உம் பப்பாளி!!! இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றதா!!!
பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம்.
உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் பழங்களில் பப்பாளி பழமும் ஒன்று. இந்த பப்பாளி பழத்தில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளது. அதாவது வைட்டமின் எ, வைட்டமின் சி, செம்புச் சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பீட்டா கரோடின் ஆகிய சத்துக்கள் உள்ளது.
இந்த பதிவில் பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வெறும் வயிற்றில் பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…
* பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது நமக்கு இருக்கும் மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கப்படுகின்றது.
* உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிடலாம். இதன் மூலம் கெட்ட கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் எடை குறைகின்றது.
* பப்பாளி பழத்தை வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் பொழுது நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கின்றது.
* வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிடும் பொழுது நம்முடைய இதய ஆரோக்கியம் மேம்படைகின்றது.
* பப்பாளி பழத்தை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது நமது உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
* பெண்கள் வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிடும் பொழுது அவர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள் சரி செய்யப்படும்.
* சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பப்பாளி பழத்தை சாப்பிடும் பொழுது அவர்களின் இரத்த சரக்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகின்றது.
குறிப்பு: கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழத்தை சாப்பிடக்கூடாது. மருத்துவர் ஆலோசனையை பெற வேண்டும். கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழத்தை சாப்பிடும் பொழுது கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் அதனால் கர்ப்பிணி பெண்கள் பப்பாளியை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.