நாக்கில் சுவை ஊரும் கேரட் அல்வா செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம் !!

0
35

நாக்கில் சுவை ஊரும் கேரட் அல்வா செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்…

விலை மலிவாக கிடைக்கம் கேரட்டில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது. கேரட் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று. கேரட் ஆரஞ்சு வண்ணம் மட்டுமல்லாது ஊதா, வெள்ளை, மஞ்சள் மற்றும் சிவப்பு போன்ற பல வண்ணங்களில் உள்ளன. கேரட்டில் வைட்டமின்கள், பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது. மேலும், கேரட் இதயம், மூளை, கல்லீரலுக்கு மிகவும் நன்மை செய்கிறது.

சரி.. கேரட்டை வைத்து எப்படி சுவையான அல்வா செய்வது என்று பார்ப்போம் –

தேவையான பொருட்கள்

கேரட் – 8

சர்க்கரை – 2 கப்

பால் – 2 கப்

ஏலக்காய் – 4

முந்திரிப் பருப்பு – 8

உலர்ந்த திராட்சை – 6

நெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் கேரட்டை நன்றாக தோல் நீக்கி சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு, அதனை நன்றாக துருவி கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், சிறிது நெய் ஊற்றி அதில், துருவிய கேரட்டை போட்டு நன்கு பச்சை வாசம் போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

கேரட் நன்றாக வதங்கிய பிறகு, காய்ச்சி ஆற வைத்த பாலை சேர்க்க வேண்டும்.

கேரட் மூழ்கும் அளவிற்கு பால் சேர்த்தால் போதும்.

பாலுடன் சேர்ந்து கேரட் நன்றாக வேகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

கேரட் வெந்ததும், அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பால் வற்றி கேரட் நன்கு சுருண்டு வரும்போது கொஞ்சம் நெய் சேர்த்து கிளற வேண்டும்.

இறுதியாக ஏலக்காய் தூள், கொஞ்சம் நெய் சேர்த்து வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்தால் சுவையான கேரட் அல்வா ரெடி.

author avatar
Gayathri