பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..?

0
70
#image_title

பெற்றோர்களே தெரிந்து கொள்ளுங்கள்.. பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கலாமா..?

பெண் வயதிற்கு வரும் நேரம் ருது ஜாதகம் பெண் மூன்று வகை பிறப்புகளை கொண்டு உள்ளார் என்பார்கள். அதாவது பிறப்பது, பூப்படைவது மற்றும் குழந்தை பெற்றெடுப்பது என மூன்று வகை பிறப்புகள் பெண்ணிற்கு உண்டு என்பார்கள்.

சில ஜாதகம் கணிப்பவர்கள், பெண் பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிக்கிறார்கள். அதுவே சரியான முறை என கருத்தும் கூறுகின்றனர்.

அவர்கள் சொல்படி பார்க்கப்போனால் பெண்ணிற்கு மூன்று பிறப்பு என அவர்கள் எடுத்துக் கொள்வதை கணக்கிட்டால், பெண் தாய்மை அடையும் நேரத்திற்கு மேலும் ஒரு ஜாதகம் கணிக்க கணிக்க வேண்டிய நிலை வரும்.

அப்படி பார்த்தால், பிறந்த நேரத்தில் ரிஷப லக்னம் என்றால், பூப்பெய்திய நேரத்தில் தனுசு என்றும் தாய்மை அடையும் நேரத்தில் சிம்மம் என்றும் வந்தால், எதை வைத்து பலன் கணிப்பது?

பிறப்பு நேரம் என்பது ஒன்றே… அது அம்மாவின் வயிற்றில் இருந்து குழந்தை புவியை அடையும் நேரம். அப்போதைய கிரக நிலைகள் அந்த நேரத்தை வைத்து மட்டுமே சாதகம் கணிப்பது முறையாகும். ருது ஜாதகம் தேவையே இல்லாத ஒன்றாகும்.