விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்!! காரணம் குறித்து விசாரணை!!
பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதில் 4 ராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த விமான விபத்தானது சூடான் நாட்டில் நடைபெற்றுள்ளது. சூடான் நாட்டில் கடந்த ஆண்டு 2021 அக்டோபர் மாதம் 25ஆம் நாள் முதல் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியதில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. இதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 3000-க்கும் அதிகமான மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தப் போரினால் ஏராளமான மக்கள் எல்லையைத் தாண்டி அகதிகளாக வேறு நாடுகளுக்கு தப்பி சென்றுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு அமலுக்கு வர இருக்கிறது. அங்கு போர் நடந்து 100 வது நாளை எட்டியுள்ளது.
இந்த நிலையில் சூடான் விமான நிலையத்திற்கு சென்ற பயணிகள் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி உள்ளது. இந்த விபத்தினை பற்றி சூடான் ராணுவம் பேஸ்புக்கில் வெளியிட்ட ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் ஆன்டனோவ் பயணிகள் விமானம் ஒன்று தொழில் நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியது.
இந்த விமான விபத்தில் ராணுவ அதிகாரிகள் 4 பேரும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே ஒரு குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளது.
நூறாவது நாளை எட்டிய போரில் நேற்று தர்பாரில் திடீரென ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். போரால் அச்சமுற்று மக்கள் பல நாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர்.