பயணிகள் ஷாக்!! இதன் காரணமாக திடீரென உயர்ந்த பேருந்து கட்டணம்!!
அதிக நாட்கள் விடுமுறை நாட்கள் இந்த மாதத்தில் வருவதால் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தனியார், ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலையானது 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை முதல் விடுமுறை என்பதால் சென்னையில் மற்றும் வெளியூரில் தங்கி பணி செய்யும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். அதன் காரணமாக பேருந்துகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. தொடர் விடுமுறையின் காரணமாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்குகிறது.
இந்த சூழ்நிலையில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பஸ் களில் பேருந்து கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. அதிலும் ஆம்னி பஸ்களின் கட்டணம் 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
சென்னை- கன்னியாகுமரி செல்லும் ஏசி பஸ் ரூ.3000, சாதாரண பஸ் ரூ.1400, சென்னை -நெல்லை ஏசி பஸ் ரூ. 2450, சாதாரண பஸ் ரூபாய்ரூ. 1400 சென்னை- மதுரை ஏசி பஸ் 200,0 சாதாரண பஸ் 1200 என தற்போது டிக்கெட் கட்டணமானது உயர்த்தி வசூலிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திடீரென ஆம்னி பஸ்சில் இந்த விலையற்றத்தால் பொதுமக்கள் அதைச் அதிர்ச்சி அடைந்ததோடு மட்டுமில்லாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.