பொது இடத்தில் இனி சிறுநீர் கழித்தால் அபராதம்! மாநகராட்சி வெளியிட்ட அதிரடி உத்தரவு!
சென்னை மாநகரில் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதை ஒரு குற்றமாக கருதுவது இல்லை. ஆனால் மாநகராட்சி சட்டப்படி பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களிடம் ரூ 50 அபராதம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் சிறுநீர் கழிப்பதை தடுக்கும் நோக்கில் தான் இந்த முடிவை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது என கூறப்படுகிறது.
இந்த 50 ரூபாய் அபராத தொகை என்பது குறைவு தான். ஆனாலும் அதனை முறையாக செயல்படுத்தினால் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த முடியும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.மேலும் இந்த அபராத வசூலுக்கு ரசீது எண்ணையும் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.
அந்த ரசீதியில் பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவருடைய பெயர் மற்றும்ம் அபராத தொகை ஆகியவை இடம் பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் முன்னதாகவே இருந்தது ஆனால் அதனை யாரும் அமல் படுத்தவில்லை தற்போது சென்னை மாநகரின் சுகாதாரத்தை பேணும் வகையில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.