ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல  முயற்சி! 

0
225
#image_title

ரோந்து பணியின் போது ஏற்பட்ட பரபரப்பு! பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல  முயற்சி! 

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரியை லாரியை ஏற்றி கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுனர் மற்றும் ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புவியியல் மற்றும் கணிம வளத்துறையில்  பறக்கும் படை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பிரியா. இவர் திருப்பூர் மாவட்டம் மற்றும் சேலம் மண்டல பறக்கும் படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது,  அங்கு வந்த கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளார். 

அந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி 3 யூனிட் கிராவல் மண் கொண்டு செல்வது தெரியவந்தது. இதனால் வாகனத்தை காவல் நிலையம் கொண்டு வருமாறு அதிகாரி பிரியா கூறியுள்ளார். ஆனால் திடீரென லாரி ஓட்டுனர் ராசு மற்றும் ஜேசிபி ஓட்டுநர் அன்பரசன் ஆகிய இருவரும் பிரியா மீது லாரியை ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இந்த சம்பவத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பின்னர்  காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவிக்கவே போலீசார் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகின்றனர். ரோந்து பணியில் உள்ள பெண் அதிகாரியை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.