அணில்கள் ஓடுவதால் தான் மின்வெட்டு! அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள்

அணில்கள் ஓடுவதால் தான் மின்வெட்டு! அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலுக்கு எழுந்த கடுமையான விமர்சனங்கள்

தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் செந்தில் பாலாஜி மின்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.தேர்தல் பரப்புரையின் போது அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திமுகவின் கடந்த கால செயல்பாடுகளை உதாரணமாக காட்டி விமர்சித்து வந்தனர்.அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் நிலவிய கடுமையான மின்வெட்டும் உதாரணமாக கூறி விமர்சிக்கபட்டது.

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த சில தினங்களிலே தமிழத்தில் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட ஆரம்பித்தது.தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தினமும் சில மணி நேரங்களாவது மின்வெட்டு ஏற்பட்டு வருவது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தது போலவே திமுக ஆட்சியில் மின்வெட்டு ஏற்பட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது நிலவும் மின்வெட்டு குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது சில இடங்களில் செடி வளர்ந்து கம்பியின் மீது மோதுவதாலும்,மின்கம்பியின் மீது அணில்கள் ஓடுவதாலும் கம்பிகள் உரசி கொள்வதால் மின்தடை ஏற்படுவதாக கூறியுள்ளார்.

மின்துறை அமைச்சரின் இந்த பதிலை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.அவற்றில் சில பதிவுகள்

https://twitter.com/Jeyan_kumari/status/1407152097066319872

அதிமுக ஆட்சியில் அணிலே இல்லையா? அது மின் கம்பிகளின் மீது ஓடவில்லையா என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Leave a Comment