காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம்

0
80
VCK Lawyer Problem with Police
VCK Lawyer Problem with Police

காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்! தொடரும் அராஜகம்

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது பொதுமக்களை கடுமையாக பாதித்து வரும் சூழலில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.இதனையடுத்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த ஆண்டு ஊரடங்கின் போது காவல்துறையினரிடம் இருந்த கடுமையான எச்சரிப்பு எதுவும் இந்த ஆண்டு இல்லை என்பதை மக்களே பரவலாக பேசி வருகின்றனர்.அவரவர் பாதுகாப்பை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் என்று அறிவுரை மட்டுமே சொல்லி அனுப்பி வருகின்றனர்.

இதையும் மீறி சில இடங்களில் காவல் துறை அதிகாரிகளை மிரட்டும் சம்பவமும் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.போலி இ பாஸ் வாங்கிய ஆட்டோ டிரைவர் பெண் காவல் துறை அதிகாரியை மிரட்டியது,மகளுக்காக பெண் வழக்கறிஞர் ஒருவர் போலிசை மிரட்டி ஜெயிலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் வழக்கறிஞர் ஒருவர் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை, கொண்டி தோப்பு பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சென்ற கார் அசுர வேகத்தில் சென்று அரசுப்பேருந்து மீது மோதுவது போல் சென்று நின்றுள்ளது. இந்த சம்பவத்தை கண்ட காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்று காரில் இருந்த நபர்களிடம் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர். அப்போது அங்கு காரில் முககவசம் அணியாமல் ஒருவர் மதுபோதையில் இருந்துள்ளார்.மேலும் அவர் விசாரிக்க வந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வாக்குவாதத்தின் போது அவர் தான் ஒரு வழக்கறிஞர் என்று போலீசாரிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த விஸ்வநாதன் என தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி விசாரிக்க சென்ற எஸ்.ஐ. ராமச்சந்திரன் மதுபோதையில் இருந்த வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்துள்ளார்.

தற்போது காவல்துறையினருடன் தகராறில் ஈடுபட்ட வழக்கறிஞரின் வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.