முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கு! எதிர்க்கட்சித் தலைவருக்கு வந்த புது சிக்கல்!

0
81

சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் துணை நடிகை சாந்தினி அவர்களுடன் திருமணம் செய்யாமல் கடந்த ஐந்து வருடகாலமாக வாழ்க்கை நடத்தி வந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதோடு மூன்று முறை கருக்கலைப்பு செய்திருக்கிறார் என்று துணை நடிகை சாந்தினி காவல்துறையில் புகார் அளித்தார்.அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை மிகத் தீவிரமாகத் தேடத் தொடங்கினார்கள். இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் முன் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் திடீரென தலைமறைவாகி விட்டார். அதோடு அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று எல்லோரும் தலைமறைவாகினர்.இதனைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சமீபத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்தார்கள். அதோடு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தார்கள்.அதோடு நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவரை காவல்துறையின் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் ஆயத்தமாகி வருகிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் அதிமுகவிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட புகழேந்தி நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைதாகி இருக்கின்றார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை முதலில் எனக்கு தெரியாது என்று தெரிவித்தார். ஆனால் பின்னர் பணம் பறிக்கும் கும்பல் என்று தெரிவித்தார். அதன்பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் தன்னுடன் வாடகைக்கு குடியிருந்தார் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்று தெரிவித்திருக்கிறார்.


இவ்வளவு பெரிய மோசடிகளை செய்த மணிகண்டனை இதுவரையில் அதிமுகவில் இருந்து நீக்காததற்கு காரணம் என்ன ஜெயலலிதா மட்டும் உயிருடன் இருந்திருந்தால் ஒரு நொடியில் மணிகண்டனை கட்சியில் இருந்து தூக்கி வீசி இருப்பார். இவர்கள் ஏன் மணிகண்டனுக்கு துணை நிற்கிறார்கள் என்று விசாரணையில் நிச்சயமாக தெரியவரும் என்று தெரிவித்திருக்கின்றார்.

கடந்த 2019ஆம் ஆண்டு அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை எதற்காக நீக்கினார்கள் அந்த நடிகை மணிகண்டனை மட்டும் சந்திக்கவில்லை. அதோடு சில அமைச்சர்களையும் சந்தித்து இருக்கின்றார். ஐந்து வருடங்களாக அமைச்சராக இருந்த மணிகண்டன் ரகசிய குடும்பம் நடத்தியது முதலமைச்சராக இருந்த எடப்பாடிபழனிச்சாமிக்கு தெரியாதா இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை விசாரணை செய்ய வேண்டும் என்று புகழேந்தி தெரிவித்திருக்கின்றார்.