கோவிலுக்குள் வேற்று மதத்தினர் நுழைய தடை!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Photo of author

By CineDesk

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் நுழைய தடை!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

CineDesk

People of other religions are not allowed to enter the temple!! The Supreme Court sensational verdict!!

கோவிலுக்குள் வேற்று மதத்தினர் நுழைய தடை!! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

1947   ஆம் ஆண்டில் இந்து கோவில்களுக்குள் வேறு மதத்தை சேர்ந்தவர்கள் நுழையக்கூடாது என்று இந்து கோவில் நுழைவு அங்கீகார சட்டம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 1970  ஆம் ஆண்டில் இது குறித்த சட்டபிரிவு ஒன்று ரத்து செய்யப்பட்டது. எனவே, இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

எனவே, இந்து கோவில்களுக்கு வேறு மதத்தினர் வரக்கூடாது. மேலும், கடவுளின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்களும் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கபட்டது.

அந்த வகையில், பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகையை ஒன்றை பழனி தேவஸ்தானம் வைத்திருந்தது.

இந்த பலகையை தற்போது செயல் அலுவலர் நீக்கிவிட்டார். இது சர்ச்சைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலும் உள்ளது.

எனவே, இது தொடர்பாக ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினர் யாரும் பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அனைத்து கோவில்களுக்கும் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகையை கொண்டு வர வேண்டும் என்று கூறி இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், கோவிலுக்குள் நுழைய தடை விதித்து அறிவிக்கப்பட்ட பலகையை எதற்காக நீக்கினீர்கள்? உடனடியாக அந்த பலகையை அதே இடத்தில் திரும்ப வைக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு பிறகு நடக்கும் என்று ஒத்தி வைத்துள்ளார்.