நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் 

Photo of author

By CineDesk

நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார் 

CineDesk

Updated on:

Arrested

நண்பரின் கொலைக்கு பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளோடு சுற்றிய நபர்கள்! சுற்றி வளைத்து பிடித்த போலீசார்

கடந்த ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி இரவு நுங்கம்பாக்கம் குளக்கரை தெருவை சேர்ந்த குமாரை, அதே பகுதியை சேர்ந்த தனசேகர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்தனர்.

இதனை தொடர்ந்து குமாரின் நண்பர் நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தை சேர்ந்த பீடி தினேஷ் தனது நண்பரை கொலை செய்தவர்களை பழிவாங்க எண்ணினார். இந்நிலையில் இவர் பழைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்ததை தொடர்ந்து, அங்கிருந்து தப்பித்து போலீசாரிடம் சிக்காமல் போரூர் பாரதியார் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தலைமறைவாக வசித்து வந்துள்ளார்.

இன்னிலையில் கடந்த இரண்டு மாதங்களாக நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தனிப்படை போலிசார் காணமல் போன ரவுடிகளான இவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் போலிசாரின் இந்த தேடுதல் வேட்டையின் போது ரவுடிகள் வசித்து வந்த இடத்தை கண்டு பிடித்தனர்.

அதனை தொடர்ந்து கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்களின் தனசேகரை கொலை செய்வதற்கான திட்டம் தெரியவந்தது. மேலும் அவர்கள் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்து பார்த்த பொது 5 நாட்டு வெடிகுண்டுகள், பட்டா கத்தி ஒரு கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்துள்ளனர். காவல்துறையினர் அவற்றை பறிமுதல் செய்தது மட்டும் இன்றி அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள அஜிம், பீடி தினேஷ் ஆகியோர் மீது நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, பாண்டிபஜார், பூந்தமல்லி உள்ளிட்ட சென்னையில் பல்வேறு இடங்களில் அடிதடி கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.