வரவிற்கு மேல் செலவாகிறதே என்று புலம்பும் நபர்களா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 48 நாட்களுக்குள் பலன் கிடைத்துவிடும்!!

0
39
#image_title

வரவிற்கு மேல் செலவாகிறதே என்று புலம்பும் நபர்களா? அப்போ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!! 48 நாட்களுக்குள் பலன் கிடைத்துவிடும்!!

இன்றைய உலகில் எவ்வளவு சம்பாதித்தாலும் பணத் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணம் ஏதோ ஒரு வழியில் அவை செலவாகி விடுகிறது என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் நபர்கள் சில வழி முறைகளை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

வீட்டில் செலவு குறைந்து பண வரவு அதிகரிக்க வெங்காரத்துடன் ஒரு பொருளை வீட்டு பூஜை அறையில் வைத்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

*வெங்காரம்

*கிராம்பு

*வெள்ளைத் துணி

பரிகாரம் செய்யும் முறை…

நாட்டு மருந்துக் கடையில் உள்ள வெங்காரம் சிறிது வாங்கிக் கொள்ளவும். இந்த வெங்காரம் பார்க்க படிகாரம் போல் இருக்கும். ஆனால் படிகாரம் வேறு. வெங்காரம் வேறு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிறிய வெள்ளைத் துணியில் சிறிது வெங்காரம் வைத்து 2 தேக்கரண்டி கிராம்பு வைத்து முடுச்சாக கட்டி பணப் பெட்டியில் போட்டு வைக்கவும். இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று காலை 6 முதல் 7 மணிக்குள் செய்ய வேண்டும்.

48 நாட்களுக்கு ஒருமுறை இதை மாற்றி பழையதைக் கால் படாத இடத்தில் போடவும்.

முடிந்தவர்கள், இதை மாற்றும் நாளன்று விநாயகர் கோயிலுக்குச் சென்று ஓர் சிதறு தேங்காய் போட்டால் இன்னும் நல்லது.

இந்த இரண்டு முறை செய்வதற்குள் வரவுக்குள் செலவுகள் அடங்கி பணம் தங்க ஆரம்பிக்கும்.

இதே போன்று மற்றொரு முடிச்சு செய்து ஹேண்ட் போக்கிலும் வைத்துக் கொள்ளலாம். அதையும் 48 நாட்களுக்கு ஒருமுறை மாற்றவும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நாம் சம்பாதிக்கும் பணத்திற்குள் செலவு அடங்கி பணம் சேமிப்பதற்கான வழி கிடைக்கும்.