5 நிமிடத்தில் வாய் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் குடிங்க!!

0
32
#image_title

5 நிமிடத்தில் வாய் துர்நாற்றம் நீங்க வேண்டுமா? அப்போ இதை 1 கிளாஸ் குடிங்க!!

வாய் துர்நாற்றம் சில நேரங்களில் நம் அனைவரையும் தர்ம சங்கடமான சூழலுக்கு தள்ளிவிடும். இந்த பாதிப்பால் பலர் அதிகம் பேச முடியாமல் தவித்து வருகின்றனர்.வாயை திறந்தாலே கேட்ட வாடை வருகிறதா?

வாய் துர்நாற்றம் உருவாக காரணங்கள்:-

*பல் சொத்தை, ஈறுகளில் பிரச்சனை

*வயிற்றுப்புண்

*அஜீரணக் கோளாறு

*குடல் தொடர்பான பிரச்சனை

*நாக்கில் படிந்துள்ள வெள்ளை படலம்

*புகை பிடித்தல்

*அல்சர்

*மது அருந்துதல்

அதேபோல் பூண்டு, வெங்காயம் போன்ற உணவு வகைகளில் மணமுள்ள சல்ஃபர் அதிகம் உள்ளது. பால், இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றில் அதிக புரதம் உள்ளது. இவையனைத்தும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஊக்குவிக்கின்றன.

வாய் துர்நாற்றம் நீங்க எளிய வீட்டு வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*சோம்பு – 1/2 தேகக்கரண்டி

*ஏலக்காய் – 1

*புதினா – 5 இலைகள்

*எலுமிச்சை சாறு – 10 துளி

*உப்பு – சிறிதளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து 1/2 தேக்கரண்டி சோம்பு, 1 ஏலக்காயை இடித்து சேர்த்து கொள்ளவும்.

பின்னர் 5 புதினா இலைகள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். 1 கிளாஸ் தண்ணீர் 1/2 கிளாஸாக வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும். பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி 10 துளி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கி காலையில் பருகவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் வாய் துர்நாற்றம் நீங்கிவிடும்.