கொத்தமல்லி விதையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க மக்களே!!

0
54
#image_title

கொத்தமல்லி விதையில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க மக்களே!!

நம் வீட்டு சமையலில் வாசனையை கூட்டுவதில் கொத்தமல்லி இலை மற்றும் அதன் விதைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த கொத்தமல்லி இலையைப் போல் அதன் விதையிலும் வைட்டமின் ஏ,பி1 மற்றும் இரும்புச் சத்துக்கள்,புரோட்டீன்,பாஸ்பரஸ்,கால்சியம் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் அடங்கி இருக்கிறது.இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும்,நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகளவில் வழங்குகிறது.

கொத்தமல்லி விதையின் பயன்கள்:-

*கண் சம்மந்தப்பட்ட நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நபர்கள் கொத்தமல்லி விதை 2 அல்லது 3 தேக்கரண்டி எடுத்து ஒரு கிளாஸ் நீரில் சேர்த்து நன்கு ஊற விடவும்.பின்னர் அடுத்த நாள் காலையில் அந்த நீரை பருகினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.காரணம் கொத்தமல்லி விதையில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து இருக்கிறது.

*இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்த தினமும் கொத்தமல்லி ஊறவைத்த தண்ணீரை பருகுவது நல்லது.

*எலும்பு பலம் பெற கொதிக்கும் நீரில் கொத்தமல்லி விதைகளை சேர்த்து காய்ச்சி வடிகட்டி பருக வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் எலும்பு தொடர்பான பாதிப்புகள் நீங்கி அவை வலுவாக இருக்கும்.

*பெரும்பாலான பெண்கள் வெள்ளைப்படுதல் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.அவர்கள் வாரத்தில் 2 அல்லது 3 முறை கொத்தமல்லி விதை ஊறவைத்த தண்ணீரை பருகுவது நல்லது.

*இரத்த சோகை பாதிப்பு இருப்பவர்கள் கொதிக்கும் நீரில் கொத்தமல்லி விதை 1 அல்லது 2 தேக்கரண்டி போட்டு காய்ச்சி வடிகட்டி பருகினால் விரைவில் அந்த பாதிப்பு சரியாகும்,