தோற்கப்போகும் பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் வாக்குகளை வீணாக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!!

Photo of author

By Vijay

தோற்கப்போகும் பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் வாக்குகளை வீணாக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!!

Vijay

Updated on:

தோற்கப்போகும் பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் வாக்குகளை வீணாக்க மாட்டார்கள் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்..!!!

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். அதன்படி நேற்று சென்னை வந்த நிலையில், அங்கு பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று கோவை செல்கிறார்.

இந்நிலையில், இது வெறும் ஷோ அவ்வளவு தான் இதனால் தேர்தலில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படபோவதில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். மேலும், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. வேலை வாய்ப்பு தருவதாக கூறினார்களே தந்தார்களா?

நாடு முழுவதும் ஏழைகளே இல்லாத நிலையை ஏற்படுத்தி விட்டார்களா? எனவே மோடி தமிழகத்திற்கு வந்து வாக்கு சேர்கரிப்பதால் எந்த மாற்றமும் நிகழ போவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக ஆகிய கட்சிகள் தான். தோற்கப்போகும் பாஜகவிற்கு வாக்களித்து மக்கள் யாரும் அவர்களின் வாக்குகளை வீணடிக்க விரும்ப மாட்டார்கள்.

அதுமட்டுமல்ல தென் சென்னையில் பாஜக சார்பாக போட்டி போட வேட்பாளர் கிடைக்கவில்லை. அதனால் தான் ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜனை பதவியை ராஜினாமா செய்துவிட்டு போட்டி போட வைத்துள்ளார்கள். மக்களுக்கு தெரியும் அவர்களின் வாக்குகளை வீணடிக்க மாட்டார்கள். சரியான பாடம் புகட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.