வழுக்கை தலையில் முடி வளர உதவும் மிளகு – இதை எவ்வாறு பயன்படுத்துவது?

Photo of author

By Divya

வழுக்கை தலையில் முடி வளர உதவும் மிளகு – இதை எவ்வாறு பயன்படுத்துவது?

இன்றைய உலகில் பெரும்பாலானோர் முடி உதிர்தலால் அவதியடைந்து வருகின்றனர். இந்த முடி உதிர்தலால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு
2)பெரு நெல்லிக்காய்
3)தேன்

செய்முறை:-

முதலில் நான்கு அல்லது ஐந்து கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு பெரு நெல்லிக்காயை விதை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும். இதை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

இடித்த மிளகு + இடித்த பெருநெல்லிக்காயை தேனில் போட்டு எட்டு ,மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு இதை சாப்பிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முடி வளர்ச்சி அசுர வேகம் பெறும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு மிளகு
2)செம்பருத்தி இதழ்
3)கறிவேப்பிலை
4)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஒரு உரலில் 3 அல்லது 4 மிளகை போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு செம்பருத்தி இதழ் 1/4 கப் அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும். அதேபோல் கறிவேப்பிலை 1/4 கப் அளவு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1 கப் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். 5 நிமிடங்களுக்கு பிறகு இடித்த மிளகு, செம்பருத்தி இதழ், கறிவேப்பிலை சேர்த்து நன்கு காய்ச்சவும். எண்ணெய் நன்கு கொதித்து வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.

இதை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தால் புதிதாக முடி வளரத் தொடங்கும்.