கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா போன்ற நாடுகள் தடுப்பூசி தயாரிப்பதில் ஆர்வம் காட்டியுள்ளது. ரஷியா முதல் தடுப்பூசியை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தடுப்பூசி ஒன்ற தயாரித்துள்ளது. இதுதான் முதன்முதலாக உலகளவில் வெளியாகும் வெற்றிகரமான தடுப்பூசியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
அஸ்ட்ராஜெனெகா 3-ம் கட்ட பரிசோதனையை தொடங்கிவிட்டது. உலகின் பல்வேறு நாடுகள் இந்த நிறுவனத்திடம் தயாரிப்பு உரிமை பெற்ற அந்தந்த நாடுகளில் 3-ம் கட்ட பரிசோதனையை தொடங்கியுள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தயாரிக்க இருக்கிறது. அரசு அனுதியோடு 3-ம் கட்ட பரிசோதனையை தொடங்கிவிட்டது. இந்நிலையில் அமெரிக்காவிலும் அஸ்ட்ராஜெனெகாவின் 3-ம் கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.