எலி நடமாட்டம் அடியோடு ஒழிய இந்த இரண்டு பொருட்களை அங்கு வையுங்கள்..!! 100% தீர்வு கிடைக்கும்..!!

Photo of author

By Divya

எலி நடமாட்டம் அடியோடு ஒழிய இந்த இரண்டு பொருட்களை அங்கு வையுங்கள்..!! 100% தீர்வு கிடைக்கும்..!!

நம் வீட்டில் ஒரு முறை எலி புகுந்து விட்டால் அதனை வெளியேற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இவ்வாறு உணவு பொருட்களை உண்டு நமக்கு அதிகளவு பயத்தை காட்டி வரும் எலிகளை வீட்டில் இருக்கின்ற பொருட்களை வைத்து எளிதில் விரட்டி விட முடியும். இதனால் வீட்டில் எப்பொழுதும் எலி தொல்லை இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.

தேவையான பொருட்கள்:-

*வேர்க்கடலை

*சிமெண்ட்

செய்முறை…

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு வேர்க்கடலை சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும். பின்னர் இதை ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் இந்த [பொடித்து வைத்துள்ள வேர்க்கடலை பவுடரை சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக ஒரு கைப்பிடி அளவு சிமெண்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இதை வீட்டில் எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் எலி பொந்து உள்ளிட்ட இடங்களில் வைக்கவும். இவ்வாறு வைத்தால் எலிகள் தானாகவே வந்து அவற்றை சாப்பிட்டு விடும்.

எலிகளுக்கு நிலக்கடலை மிகவும் பிடித்த பொருளாகும். இதை சாப்பிட்ட எலி பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடனடியாக இறந்து விடும்.