பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு! உச்சநீமன்றம் வெளியிட்ட உத்தரவு!

0
221
Plus Two student Smt. death case! The order issued by the Supreme Court!
Plus Two student Smt. death case! The order issued by the Supreme Court!

பிளஸ் டூ மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு! உச்சநீமன்றம் வெளியிட்ட உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் பகுதியில் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகின்றது.அந்த பள்ளியில் கடந்த ஜூலை 13 ஆம் தேதி அதிகாலை விடுதியில் தங்கியிருந்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தனது மகள் தற்கொலை செய்யவில்லை கொலை என்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.அந்த போராட்டம் மாலை நேரத்தில் வன்முறையாக வெடித்தது.அப்போது பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. மானவர்களின் டிசி அனைத்தும் தீயிடப்பட்டது.

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஸ்ரீமதியின் உடல் பெற்றோர் வாங்கி தகனம் செய்தனர்.மேலும் மாணவி மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மாணவியின் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார்.இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பல்வேறு கேள்விகள் எழுப்பினார்கள்.அதற்கு மனுதார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,உடல்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் பற்றி கூறினார்கள்.அதற்கு நீதிபதிகள் மாடியில் இருந்து குதித்தால் கூட காயங்கள் ஏற்பட்டிருக்கும் தானே என்று கேள்வி எழுப்பினார்கள்.

மேலும் ஸ்ரீமதியின் தாயார் மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளியின் முதல்வர் ,தாளாளர்,செயலாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.மேலும் இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Previous articleவெளிநாடு செல்ல இனிமேல் பாஸ்போர்ட் வேண்டாம்..ஆதார் அட்டை மட்டும் போதும் !
Next articleமாநில அரசின் பலே திட்டம்! விண்ணப்பித்த சில மணி நேரங்களிலேயே ரேஷன் கார்டை பெறலாம்!