ஏம்மா!! நீ படம் காட்னது போதும் கிளம்பு!! மாட்டி கொண்ட போலீஸ் மனைவி!!

Photo of author

By Kowsalya

சென்னை திருமுல்லைவாயில் கொரோனா பரிசோதனைக்காக வந்து நகையைத் திருடி விட்டார்கள் என்று பொய் கூறி போலீஸின் மனைவி நாடகமாடியது அம்பலமான சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள ஆவடியை அடுத்து திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகர் என்ற பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தர்மராஜ், இவருக்கு வயது 27, தமிழ்நாடு சிறப்பு காவல் படை, மூன்றாம் அணி காவலர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரலேகா, வயது 24. தர்மராஜ் வழக்கம் போல நேற்று முன்தினம் 3.30 மணி அளவில் வேலைக்கு சென்றுள்ளார்.

திடீரென்று சந்திரலேகா திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். சந்திரலேகா அளித்த புகார் என்னவென்றால், .நேற்று முன்தினம் மாலை கணவர் தர்மராஜ் வேலைக்கு சென்ற சில மணி நேரத்தில் கொரோண பரிசோதனை செய்ய வேண்டும் என்ற ஒரு சில நபர்கள் வந்ததாகவும், அவர்கள் சந்திரலேகாவிற்கு மயக்க மருந்து கொடுத்து வீட்டிலுள்ள 5.5 சவரன் நகைகளையும் 40,000 பணத்தையும் திருடிச் சென்றதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக சந்திரலேகாவை விசாரித்த திருமுல்லைவாயில் காவல் நிலைய அதிகாரிகள், சந்திரலேகாவின் கழுத்தில் நகைகள் இருப்பதைப் பார்த்து சந்தேகமடைந்து இதில் ஏதோ பிரச்சினை உள்ளதாக கண்டறிந்தனர்.

இதனால் சந்திரலேகாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட பொழுது நகை காணாமல் போனதாக நாடகம் ஆடியது தெரியவந்துள்ளது.

கணவர் தர்மராஜ்க்கு தெரியாமல் உறவினர் ஒருவரிடம் நகைகளையும் பணத்தையும் கொடுத்துள்ளார். அவர்கள் திரும்பி தரமாட்டார்கள் என்று தெரிந்த சந்திரலேகா கணவரிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இந்த மாதிரியான நாடகத்தை அரங்கேற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.