ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு!

0
277

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு!

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் கடல்வாழ் உயிரினங்களில் உள்ளன. கடல்வாழ் உயிரினமான இறாலில் அதிக புரதச் சத்துக்களும் வைட்டமின் D-யும் உள்ளன. இதில் கார்போஹைட்ரேட் மிக மிக குறைந்த அளவில் காணப்படுவதால் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்போருக்கு இது மிகச் சிறந்த உணவாகும். கண்பார்வை சிதைந்து போவதற்கு இறால் சாப்பிட நல்ல தெளிவான பார்வை கிடைக்கும்.

சுவையான நாக்கில் எச்சில் ஊறும் இறால் வறுவல் எப்படி செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

1. இறால் 200 கிராம்

2. எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி.

3. பட்டை, கிராம்பு ,ஏலக்காய்

4. சிவப்பு மிளகாய் 3

5. வெங்காயம் 1 சிறிதாக நறுக்கியது.

6. கறிவேப்பிலை

7. இஞ்சி பூண்டு விழுது

8. உப்பு.

மசாலா தூள் தயாரிக்க:

1.கொத்தமல்லி விதை 2 தேக்கரண்டி

2. சீரகம் ஒரு தேக்கரண்டி

3. மிளகு ஒரு தேக்கரண்டி.

செய்முறை:

மசாலா தூள் தயாரிக்க மேலே கொடுத்துள்ள கொத்தமல்லி விதை 2 தேக்கரண்டி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி மூன்றையும் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

1. முதலில் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய், காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து ஒரு நிமிடம் வறுக்க வேண்டும்.

2. வதக்கியவுடன் அதில் சிறியதாக வெட்டி வைத்த வெங்காயத்தை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கவும்.

3. வெங்காயம் வதங்கி கொண்டிருக்கும் பொழுது சிறிது கருவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும். நன்கு இஞ்சி-பூண்டு பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

4. இறாலின் நடுவில் உள்ள நரம்பை எடுத்து விட்டு,மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கழுவினால் சுத்தமாகிவிடும். பின்பு அந்த இறாலை மசாலாவில் போடவும்.

5. அடுப்பை மிதமான தீயில் வைத்து வதக்கவும். அதில் அரைத்த மசாலாவை 4 ஸ்பூன் போட்டு வதக்கவும். அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

6. இறால் சீக்கிரமாக வெந்து விடும் என்பதால் பதமாக பார்த்து இறக்கவும்.

 

ஆஹா ! பார்க்கும் போதே சாப்பிட துண்டும் இறால் தொக்கு!

இந்த இறால் வறுவல் நீங்கள் ரசம் சாதம், சாம்பார் சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

Previous articleகுடிக்கும் தண்ணீரில் கொரோனா வைரஸ் 99.9 சதவீதம் அழிந்துவிடுகிறது!! ஆய்வில் உறுதி!!
Next article#BreakingNews: SSLC தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here