முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான காரணம் என்ன?

0
64

ஆத்மாவில் பாவம் செய்த ஆத்மாக்கள், புண்ணியம் செய்த ஆத்மாக்கள், என இருப்பது இயல்பு தானே. ஆத்மாக்களுக்கும் பாவம், புண்ணியம், என இரண்டுமே ஒன்றுதான். அந்த பாவம் புண்ணியங்களை கொண்டுதான் பித்ருலோகத்தில் அவர்களுக்கான இடம் அமையும் என்று தான் சொல்கிறது சாஸ்திரம்.

அமாவாசை முதலான நாளில் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும், கொண்டு தர்ப்பணம் செய்யும்பொழுது அது நம்முடைய முன்னோர்களை போய் சேரும் இதன் காரணமாக, அவர்கள் செய்த பாவங்களின் கெடுபுலன்கள் குறையும், புண்ணியங்களின் பலன்கள் அதிகரிக்கும், நாமும் நம்முடைய முன்னோர்களை வணங்கிய பலனை பெறலாம். முன்னோருக்கு புண்ணியம் சேர்த்த பாவங்களை குறைத்த புண்ணியத்தை நாம் பெறலாம் என தெரிவிக்கிறார்கள்.

நாள்தோறும் முன்னோர்களை வழிபட வேண்டும், நாம் இந்த உலகிற்கு வருவதற்கு காரணமாக இருந்த முன்னோர்களை நாள்தோறும் வழிபடுவதில் தவறேதும் இல்லை.

அதேநேரம் முன்னோர்களின் வழிபாட்டை வருடத்திற்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும். த எள்ளும், தண்ணீரும், விட வேண்டும் எனவும், விவரித்து தெரிவிக்கிறது சாஸ்திரம்.

அதாவது மன்வாதி 14 நாட்கள், யுகாதி 4 நாட்கள், மாதப்பிறப்பு 12 நாட்கள், அமாவாசை 12 நாட்கள், மஹாளயப்பட்சயம் 16 நாட்கள், வியதீபாதம் 12 நாட்கள், வைத்ருதி 12 நாட்கள், அஷ்டகா 4 நாட்கள், அன்வஷ்டகா 4 நாட்கள், பூர்வேத்யு 4 நாட்கள், என தர்ப்பணம் செய்ய வேண்டும்.