தனியார் ஆம்னி பேருந்து திடீர் தீ விபத்து! போலீசார் தீவிர விசாரணை!
தூத்துக்குடியில் ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியபுரம் டெல்கோ பகுதியில் உடன்குடியில் இருந்து கோயம்பத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இந்த பேருந்தை காயாமொழி குப்புசாமிபுரம் பகுதியைச் சார்ந்த சத்யராஜ் (வயது 34) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். உடன்குடியில் இருந்து 8 மணி அளவில் கோயம்புத்தூரில் நோக்கி எக்ஸ்பிரஸ் தனியார் ஆம்னி பேருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.
தினந்தோறும் பேருந்து சரியான நிலையில் இருக்கிறதா என்று சரி பார்த்தபின் பேருந்தை இயக்குவர். இந்நிலையில் ஓட்டப்பிடாரம் அருகே புத்தூர் பாண்டியபுரம் டெலிகோ பகுதியை இரவு 10 மணி அளவில் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது மின்கசிவு காரணமாக பேருந்திலிருந்து தீப்பொறி வந்தது. இதனைப் பார்த்த டிரைவர் பேருந்தை ஓரமாக நிறுத்தி வாகனத்தை பழுது பார்த்துள்ளார். அப்பொழுது தீ வேகமாக பரவத்தொடங்கியது. இந்நிலையை அறிந்தவுடன் ஆம்னி பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயனர்கள் உள்ளிட்ட அனைவரையும் அவசர அவசரமாக கீழே இறங்கி பத்திரப்படுத்தினர். உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த சிப்காட் தீயணைப்பு துறை அதிகாரி குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயணைத்தனர். இதையடுத்து பேருந்து முழுவதும் பற்றி எரிந்து எலும்புக்கூடு போல் காட்சியளித்தது. பயணிகளின் உடைமைகள் அனைத்தும் பற்றி எரிந்தது. இதில் அதிர்ஷ்டம் என்னவென்றால் அனைவரும் எந்தக் காயமும் இன்றி உயிர் தப்பினர். இதைக்குறித்து புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.