உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!!

0
191
Promised Love Mahesh!! Teachers in Hope!!
Promised Love Mahesh!! Teachers in Hope!!

உறுதியளித்த அன்பில் மகேஷ்!! நம்பிக்கையில் ஆசிரியர்கள்!!

அரசு பள்ளி ஆசிரியர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் நீண்ட கால கோரிக்கையை முதலமைசர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தார்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுடன்  ஆலோசனை நடத்தினார்.

அதில் ஒவ்வொருவரும் கூறிய நீண்டகால கோரிக்கை மற்றும் புதிய கோரிக்கை என்று அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டார்.பின்னர் அவர்கள் கொடுத்த மனுக்கள் அனைத்தையும் படித்து பார்த்தார்.

இந்த ஆலோசனை கூட்டமானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 12.30  மணி வரை நடைபெற்றது. இது சுமார் 10 மணி நேரம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் ஆசிரியர் சங்கத்தின் சார்பாக ஜூலை 28 ம் தேதி ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர் ஆசிரியர்கள் பல கோரிக்கையை முன் வைத்தனர் அதில் பழைய ஓய்வுதிய திட்டம் மீண்டும் கொண்டு வருதல், இரட்டை ஊக்கத்தொகை ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது மற்றும் பதிவி காலத்தை உயர்த்துவது போன்ற பல கோரிக்கைகள் கூறினார்கள்.

இதனையடுத்து அன்பின் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அதில் அவர் ஆசிரியர்களிடம் இருந்து பல கோரிக்கைகள் வந்துள்ளது என்றார். இது தொடர்பாக அடுத்தகட்ட ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

எழுப்பப்பட்ட  அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் இது தொடர்பாக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு விரிவான அறிக்கை தயாரித்து மாற்று வழிகள் உள்ளதா என்று ஆராயப்படும் என்றார்.

Previous articleலஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!! மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பரபரப்பு!!
Next articleவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் மாற்று வீரர்கள்!! பிசிசிஐ அறிவிப்பு!!