விலைவாசி உயர்வை எதிர்த்து இன்று கண்டன ஆரப்பட்டம்!! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். காய்கறிகளின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை ஒரு கிலோ ரூபாய் பத்து, இருபது என்று இருந்த காலம் மாறி, இப்போது ஒரு கிலோ ரூபாய் நூறை தாண்டி உச்சம் அடைந்து கொண்டு இருக்கிறது.
தக்காளி மட்டுமல்லாமல், பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி முதலியவற்றின் விலையும் தற்போது தாறு மாறாக உயர்ந்து வருகிறது. காய்கறிகளின் விலை உயர்ந்ததை அடுத்து மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது.
அதாவது துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு முதலியவற்றின் விலை 600 ரூபாயை தாண்டி விற்கப்பட்டு வருகிறது. இந்த விலைவாசி உயர்வால் மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்த விலைவாசி உயர்வை கட்டுபடுத்தக் கோரி அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் இந்த விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இந்த விலைவாசி உயர்வால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக ஆட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் இன்று கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.
இதன் பிறகாவது, இந்த விலைவாசி உயர்வுக்கு ஒரு முடிவு வருமா என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.