தமிழக அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல் ! மாணவர்கள் உற்சாகம்!

Photo of author

By CineDesk

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல் ! மாணவர்கள் உற்சாகம்!

CineDesk

Providing free bicycles to Tamil Nadu government schools! Students are excited!

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்! மாணவர்கள் உற்சாகம்!

முருங்கப்பட்டி உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் தமிழக அரசு  வழங்கியது. மேலும் வீரபாண்டி ஒன்றியம் அருகே உள்ள  முருங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கு சேலம் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  கட்டப்பட்டது.

இதனையடுத்து   புதிய வகுப்பறை கட்டடத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவலிங்கம் மற்றும் சேலம் எம். பி. எஸ். ஆா். பார்த்திபன், வீரபாண்டி ஒன்றிய அட்மா குழுத் தலைவா் வெண்ணிலா சேகா் ஆகியோர் திங்கள்கிழமை திறந்துவைத்துள்ளனர்.

அதைதொடர்ந்து  11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினா்.இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சி மன்றத் தலைவா், பெற்றோர்கள் மற்றும்  ஆசிரியா் கழக தலைவா், பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மை கல்வி குழுவினா் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.