‘செருப்பு போட விட மாட்றாங்க’ என கண்ணீர் விட்ட பட்டியலின பெண் – தனது கையால் செருப்பை போட்டுவிட்ட ராகுல்காந்தி!!

0
210
#image_title

‘செருப்பு போட விட மாட்றாங்க’ என கண்ணீர் விட்ட பட்டியலின பெண் – தனது கையால் செருப்பை போட்டுவிட்ட ராகுல்காந்தி!!

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி மத்திய பிரதேச மாநிலத்தில் தனது பயணத்தினை மேற்கொண்டு வருகிறார். அம்மாநிலத்தின் புந்தேல்கண்ட் என்னும் பகுதியில் வசிக்கும் பெண்களை சந்தித்து ராகுல் காந்தி பேசுகையில், பட்டியலின பெண் ஒருவர் கண்ணீர் மல்க தனக்கு நடக்கும் சாதிய கொடுமைகள் குறித்து கூறியதாக தெரிகிறது. அப்பெண் கூறியதாவது, நாங்கள் செருப்பு அணிந்து ஊருக்குள் சென்றால் கெட்ட சகுனம் என்று கூறுவதோடு, ஏன் கிராமத்திற்குள் செருப்பு அணிந்து வருகிறீர்கள்? என்று கேட்குறார்கள். கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்றால் எங்களை காக்க வைப்பதோடு, தூரமாக சென்று நில் என்று துரத்தியடிக்கிறார்கள். கல்யாணத்திற்கு அழைப்பார்கள். ஆனால் நாங்கள் சென்றால் எங்களை குப்பை தொட்டி அருகில் அல்லது கால்வாய் அருகில் அமர வைக்கிறார்கள். நாற்காலியில் நாங்கள் அமர்ந்தால் அடித்து துரத்துகிறார்கள்’ என்று கூறி கதறி அழுதார்.

நெகிழ்ச்சி சம்பவம்

‘யார் உங்களை இவ்வாறு கஷ்டப்படுத்துவது?’ என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த பெண், ‘உயர் ஜாதி மக்கள் தான். குறிப்பாக அகிர், பிராமணர்கள், தாக்கூர்கள் உள்ளிட்ட 3 சமூகத்தினை சேர்ந்த மக்கள் தான் எங்களை இவ்வாறு வாழ விடாமல் கஷ்டப்படுத்துகிறார்கள். நாங்கள் இவை அனைத்தையும் பொறுத்துக்கொண்டோம் ஆனால் எங்கள் பிள்ளைகள் இதனை எல்லாம் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். சுதந்திரம் கிடைத்து விட்டது என்று அனைவரும் கூறுகிறார்கள் ஆனால் நாங்கள் இன்னும் அடிமை வாழ்க்கை தான் வாழ்ந்து வருகிறோம்’ என்று தனது ஆதங்கத்தினை கொட்டி தீர்த்தார்.

மேலும் அந்த பெண் ‘நீங்கள் என்னை செருப்பை அணிய சொன்னால் நான் அணிந்து கொள்கிறேன். இல்லையெனில் நான் அதனை எனது கையிலேயே வைத்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதனை கேட்டவுடன் ராகுல் காந்தி தானே அந்த பெண்ணின் செருப்பை கையில் வாங்கி அப்பெண்ணின் காலில் தனது கையால் அணிவித்து விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நெகிழ்ச்சியான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous articleகலைஞர் எழுதுகோல் விருது 2023 – விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன தெரியுமா ?
Next articleதமிழகத்தில் மக்களை வாட்டி வதைக்கும் வெப்பம்- சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி அறிக்கை!!