ரஜினி – கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் படையப்பா 2!!! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

0
234

தமிழ் சினிமா உலகில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் அண்ணாத்த. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கினார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தலைவர் 170 படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் “படையப்பா”.

இந்த படம் 1999 ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனால் இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் படையப்பா இரண்டாம் பாகமாக இருக்க கூடும் என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் வில்லியாக நடித்த ரம்யா கிருஷ்ணன்  இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Previous articleபிரசவ நேரத்தில் செம குத்தாட்டம்!! பிரபல நடிகை அலப்பறை!!!…
Next articleஸ்விமிங் சூட்டில் ஒட்டு மொத்த கவர்ச்சியை காட்டும் ஸ்பைடர் பட கதாநாயகி! இணையத்தை கலக்கும் கிளிக்ஸ்!