ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்?

0
214
Rajiv Gandhi Govt Hospital burnt by fire!! Patients in shock?
Rajiv Gandhi Govt Hospital burnt by fire!! Patients in shock?

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்?

சென்னையில் உள்ள  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அங்கு கொரோனா நோயாளிகளுக்கென தனி வார்டு ஒதுப்பக்கபட்டுள்ளது. இந்த வார்டில் 5 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொரோனா நோயாளிக்காக ஒதுக்கப்பட்டிருந்த வார்டில் திடீர்ரென  தீ விபத்து  ஏற்பட்டது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே கொரோனா வார்டில் இருந்த நோயாளிகளை அடுத்த வார்டுக்கு மாற்றியமைத்தனர்.

பின்னர் அங்கிருந்த மருத்துவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வந்தனர்.நீண்ட நேரம் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இதனால் கொரோனா நோயாளிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.விசாரணையில் மருத்துமனையில் மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.அதிகாலை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

Previous articleஇவ்வளவு நெகட்டிவ் விமர்சனம் வந்தும் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவா? லைகர் முதல் நாள் வசூல்
Next articleஉலக கிரிக்கெட்டில் இந்த சாதனையைப் படைக்கும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் கோலிதான்!