உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

Photo of author

By Parthipan K

உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

Parthipan K

Updated on:

 

உணவு வீணானது குறித்து ஆர்.பி உதயகுமார் விளக்கம்!!

 

 

35 லட்சம் பேர் தான் மாநாட்டிற்கு வந்ததாகவும், சமையல் பாத்திரங்களை எடுக்கும் போது மீதமிருந்த உணவை தான் கீழே கொட்டியதாகவும் தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் அதிமுகவின் மூத்த நிர்வாகியுமான ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

 

 

அதிமுகவின் மாநாட்டில் வழங்கப்பட்ட புளியோதரையும், சாம்பார் சாதமும் வீணாக்கப்பட்டது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில்,

 

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார் அவர்கள், ‘சமையல் பாத்திரங்களை எடுத்து செல்வதற்காக மீதமிருந்த உணவுகள் கொட்டப்பட்டன’ என்று தெரிவித்தார். 50 லட்சம் பேர் வர திட்டமிட்டிருந்த மாநாட்டில் 35 லட்சம் பேர் மட்டுமே வந்ததால் உணவு மீதமானதாகவும் விளக்கமளித்தார். ‘மாநாடு வெற்றியை ஏற்க முடியாதவர்கள், உணவு மீதமானதை மிகைப்படுத்துகிறார்கள்’ என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.

 

 

செய்தியாளர்களிடம் பேசும்போது இடையில் மாநாட்டில் வழங்கப்பட்ட புளியோதரை புளிக்கச் செய்ததாக அவரே கூறியது குறிப்பிடத்தக்கது.