நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை! காரணம் என்ன?

0
180
Real estate tycoon killed in Namakkal district! What is the reason?
Real estate tycoon killed in Namakkal district! What is the reason?

நாமக்கல் மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை! காரணம் என்ன?

நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலை ஜெய் நகரை சேர்ந்தவர் குமரேசன் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி துர்கா. குமரேசன் கடந்த 18ஆம் தேதி இரவு சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் நண்பர்களுடன் மது குடித்துவிட்டு நள்ளிரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் திருச்சி சாலை பழைய கோர்ட் கட்டிடம் அருகே அவரை காரை  நிறுத்தியதாக கூறப்படுகிறது.

 நள்ளிரவு என்பதால்  அங்கு ஆள் நடமாட்டம் அதிகமாக காணப்படவில்லை. அப்போது அங்க வந்த மர்மநபர் குமரேசனின் களத்தில் கத்தியால் குத்தி உள்ளார். குமரேசனின் அலறல்  சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் குமரேசனை மீட்டு நாமக்கல் அரசு மருத்து மணிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குமரேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் இது  குறித்து குமரேசனின் மனைவி துர்கா நாமக்கல் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மூன்று தனி படை அமைத்து விசாரணை  மேற்கொண்டு  வருகின்றனர். மேலும்  போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர பாண்டியன் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் போலீஸ் சூ்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பெயரில் நாமக்கல் துணை போலீஸ் சூ்பிரண்டு மேற்பார்வையில் மூன்று தனிப்படைகளும் செயல்பட்டு வருகிறது.

Previous articleசேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்?
Next articleஓடிடி தளத்தில் நயன் – விக்கி திருமணம்… நெட்பிளிக்ஸ் வெளியிட்ட பிரத்யேகப் புகைப்படங்கள்!