சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?..

Photo of author

By Parthipan K

சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?..

Parthipan K

Recovery of a man's body in rotten condition in Salem! Are the people of the area in fear?

சேலத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு! அச்சத்தில் அப்பகுதி மக்கள்?..

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகேவுள்ள செங்காடு கிராமம் உள்ளது. இங்குள்ள வாழவந்தி கிராமத்திற்கு செல்லும் சாலையின் ஓரத்தில் தனியாருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் அழுகிய  நிலையில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.

இதனால் அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு அவ்வப்போது துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் சிலர் இது குறித்து ஏற்காடு காவல் நிலையத்திற்கு  தகவல் கொடுத்தனர். இதன் பெயரில் ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் மோகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அதன் பின்னர் தடவியல் நிபுணர்கள் அழைத்து வரப்பட்டு சிலர் தடயங்களை சேகரிக்கப்பட்டன. பிணத்தின் மேல் கிடந்த துணிகளை வைத்துப் பார்த்ததில் இறந்தது ஆணாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறியிருந்தனர். விசாரணையில் இறந்த ஆண் சலத்துடன் வயது 30 ஆக இருக்கும் என தெரிவித்தனர்.

மேலும் எலும்பு கூடாக கிடந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மேற்படி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக இருந்தது யார் என்றும்?

இவர் தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை யாரேனும் அவரை கொலை செய்து விட்டு காட்டுக்குள் வீசி சென்றனரா? என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.