முதல் பிரேத பரிசோதனைக்கும் இரண்டாவது பிரேத பரிசோதனைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? சிறப்பு நிபுணர் குழு வழங்கிய விளக்கம்!

0
124

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தது முதல் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனாலும் மாணவியின் சார்பில் மர்மம் இருப்பதாக அவருடைய தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதனால் மாணவியுடன் 2 முறை பிரயோக பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துவ குழு ஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவியின் உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது தொடர்பாக உடற்கூறு ஆய்வு சிறப்பு நிபுணர் மருத்துவர் செல்வகுமார் தெரிவித்ததாவது, உடல் பிரீட பரிசோதனையில் முதல் பிரேத பரிசோதனையில் உடலில் காணப்பட்ட காயங்கள் தவிர்த்து வேறு ஏதேனும் புதிய தழும்புகள் இருக்கிறதா? என்று பரிசோதிக்கப்படும்.

முதல் உடல் பிரேத பரிசோதனையில் ஏதாவது விடுபட்டிருந்தால் அதுவும் கண்டுபிடிக்கப்படும். முதல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வழங்கப்பட்ட தகவல்கள் சரியாக இருக்கிறதா? என்பதும் ஆய்வு செய்யப்படும். முடிவில் ஒரு முழுமையான பிரேத பரிசோதனையாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வீடியோ காட்சி பதிவு செய்யப்படுவது ஆதாரமாக பயன்படுத்தப்படுமா? என்பது தொடர்பாக அவர் தெரிவித்த போது வீடியோ கிராப் என்று அழைக்கப்படும் வீடியோ பதிவு செய்வது சமீபத்தில் கொண்டுவரப்பட்ட முறையாகும். விசாரணையின்போது ஏதாவது சிக்கல் இருந்தால் இது போன்ற முக்கியமான வழக்குகளில் வீடியோ பதிவு செய்யப்படுவது வழக்கம்தான் என கூறியிருந்தால்.

ஏனென்றால் பிற்காலத்தில் அதனை பார்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியும், அதனைப் பார்த்து நிபுணர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறுவதற்கு உதவிகரமாக இருக்கும், இதனால் முதல் மற்றும் 2வது பரிசோதனை என்பது வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இது என்றுமே அழிக்க முடியாத தடயமாக இருக்கும் அதில் உடலிலிருக்கின்ற அனைத்து மாற்றங்கள், உள்ளுறுப்புகள், காயங்கள், எலும்பு முறிவுகள், தழும்புகள் என்று அனைத்தும் பதிவாகி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.