பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!!

Photo of author

By Sakthi

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறைய! செம்பருத்தி டீயை இப்படி தயார் செய்து குடிங்க!!

பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது ஏற்படும் வயிறு வலியை குணப்படுத்தும் சொம்பருத்தி பூ டீ தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அதை எவ்வாறு தயார். செய்வது என்பது குறித்தும் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

செம்பருத்தி பூ நம்முடைய உடலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு மருந்தாக பயன்படுகிறது. செம்பருத்தி பூ நமக்கு ஏற்படும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். இரத்தத்தில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்றிவிடும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் ஒரு மருந்துப் பொருள் செம்பருத்தி ஆகும்.

செம்பருத்தி பூ நம்முடைய சோர்வை நீக்கி எப்பொழுதும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். சருமம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். தலை முடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக செம்பருத்தி இருக்கின்றது. இந்த செம்பருத்தி பூவை பெண்கள் டீ தயார் செய்து குடித்து வந்தால் அவர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலி குறையும். இதை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

செம்பருத்தி பூ டீ தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* செம்பருத்தி பூ
* ஏலக்காய்
* துளசி இலை
* சுக்கு

தயார் செய்யும் முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்த பின்னர் அதில் செம்பருத்தி பூ இதழ்களை சேர்த்து கொதிக்க விடவும்.

அதன் பின்னர் ஏலக்காய், சுக்கு, துளசி இலைகள் இவற்றையும் சேர்த்து குதிக்க விட்டு இறக்கி வடிகட்டவும். சுவைக்காக பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் இதை குடிக்கலாம்.