எப்பேர்பட்ட இருமல் மற்றும் தொண்டை வலி நிமிடத்தில் குணமாகும்! ஒரு டீஸ்பூன் போதும்!!

0
468

எப்பேர்பட்ட இருமல் மற்றும் தொண்டை வலி நிமிடத்தில் குணமாகும்! ஒரு டீஸ்பூன் போதும்!!

தற்போது மழை காலம் என்பதால் பலரும் சளி மற்றும் இருமல்,தொண்டை வலி போன்ற பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.அதிலும் குறிப்பாக பணிக்கு செல்வோர் பெரிதும் துன்பப்படுகின்றனர்.இனி கவலை வேண்டாம் எப்பேர்பட்ட வறட்டு இரும்பல் மற்றும் தொண்டை வலியாக இருந்தாலும் இதனை மூன்று வேளை மட்டும் குடித்தால் போதும் ஒரே நாளில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்.அது மட்டுமின்றி இதில் எந்தவித பக்க விளைவும் கிடையாது.

தேவையான பொருட்கள்:

மிளகு, திப்பிலி, சுக்கு

மிளகு திப்பிலி மற்றும் சுக்கு இவை மூன்றையும்
சம அளவு எடுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.இந்த பொடியை இரண்டு கிராம் எடுத்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனில் கலந்து காலை,மதியம் மற்றும் இரவு என மூன்று வேளை குடித்து வருகையில், எப்பேர்பட்ட வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி, தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஒரே நாளில் குணம் அடையும்.அதிலும் குறிப்பாக தொண்டை வலி மற்றும் தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஒருவேளை இதனை சாப்பிட்ட பிறகு உடனடியாக குறைவதை நீங்கள் காணலாம்.சளி தொல்லை மூன்று நாட்களில் விடுபடும்.

இதனை இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளலாம்.

Previous articleவாரிசு படத்துக்கு தெலுங்கில் மேலும் ஒரு போட்டி… களமிறங்கும் மெகா ஸ்டார்!
Next articleஇந்த ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும்!