நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம் செய்யுங்கள்!!

Photo of author

By Divya

நினைத்த காரியம் நிறைவேற வெற்றிலை பரிகாரம் செய்யுங்கள்!!

நம் அனைவருக்கும் நாம் நினைக்கும் காரியங்கள் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சிலருக்கு அவர்கள் நினைக்கும் காரியத்தில் உடனடி வெற்றி கிடைக்கும். சிலருக்கு நினைத்த காரியங்கள் நடைபெற்றுவதில் பல்வேறு தடைகள் ஏற்படும்.

இவ்வாறு நினைத்த காரியங்கள் நடைபெறாமலோ தடைபட்டு போனாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை செய்தால் நிச்சயம் பலன் கிடைக்கும்.

இந்த பரிகாரத்திற்கு வெற்றிலை, பச்சை கற்பூரம், தேங்காய் எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு சிறிய தாம்பாளத்தில் ஒரு வெற்றிலையை வைத்து அதன் மீது ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை மற்றும் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு அந்த பச்சை கற்பூரத்தை பற்ற வைக்கவும்.

பின்னர் தங்கள் கோரிக்கையை, தாங்கள் என்ன காரியத்தில் வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை கடவுளிடம் கூறி மனதார வேண்டிக் கொள்ளவும். இவ்வாறு இந்த தீபத்தை கோரிக்கை நிறைவேறும் வரை ஏற்றி வரவும்.

இந்த தீபத்தை ஏற்றுவதால் வீட்டில் தெய்வீக சக்தி அதிகமாகும். உங்களுக்கு நேர்மறை எண்ணங்கள் அதிகம் உருவாகும். இதனால் நினைத்த காரியங்களில் வெற்றியடைய வழி பிறக்கும்.