ஆராய்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்!

Photo of author

By Parthipan K

உருமாறிய கொரோனாவிற்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டது நியூசிலாந்து நாடு. அந்நாட்டில் இந்தப் பரவலால் மக்கள் இன்று வரையிலும் கூட இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. முழு ஊரடங்கு ஆனது முதல் கட்டம், இரண்டாம் கட்டம்,மற்றும் மூன்றாவது கட்டமாக தொடர்ந்து வருகிறது.

மேலும் அதிர்ச்சிகரமாக நியூசிலாந்தில், அடுத்து மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக மூன்றாவது கட்ட முழு ஊரடங்கு நீடித்து வருகிறது. இது உருமாறிய கொரோனாவாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர், ஆராய்ச்சியின் முடிவில் அது உறுதி செய்யப்பட்டது.

விஞ்ஞானிகள், மருத்துவர்கள் அறிவுரையின்படி அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அவர்கள் புதிதாக மாறியுள்ள கொரோனா அதிக அளவில் நியூசிலாந்தில் பரவி வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் வெளிநாட்டவர் யாரும் நியூசிலாந்தில் அனுமதிக்கப்படுவதில்லை. நியூசிலாந்தில் இருந்து வரும் யாரும் மற்ற நாடுகளில் அனுமதிக்கப்படுவதும் இல்லை. புதிதாக உருமாறிய கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.