நாளை CISCE தேர்வு முடிவு வெளியீடு!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

0
143

நாளை CISCE தேர்வு முடிவு வெளியீடு!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தோற்று மிகவும் கடுமையாக பாதித்து இருந்தது. எனவே, இதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டன. மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்வதற்கு பதிலாக, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதன்மூலமாக மாணவர்கள் அனைவரும் படித்து தேர்வுகளை எழுத முடியும் என்று கருதப்பட்டது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று பலரும் காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இரண்டு வருடமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடியிருந்தது. கடந்த ஜனவரி மாதத்தில் பள்ளிகள் சற்று கொரோனா குறைந்து பின் திறக்கப்பட்டது.

இருப்பினும், இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் இழுத்து மூடப்பட்டன. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக 2020 -2021 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவே இல்லை. அதனை தமிழக அரசு ரத்து செய்து விட்டது.

அதனை தொடர்ந்து இந்த நிலையில் நாளை ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. மேலும் கொரோனாவின் இரண்டாவது அலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. அதன் பின் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்செல் ஐசிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்தது.

இந்த நிலையில் உள் மதிப்பீட்டு கொள்கை அடிப்படையில் ஐசிஎஸ்இ மற்றும் ஐஎஸ்சி போன்ற வகுப்புகள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை நாளை பிற்பகல் 3 மணி அளவில் வெளியிடப்படும் என்று இந்திய பள்ளி சான்றிதழ்கள் ஐசிஎஸ்இ வெளியிட்டு உள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் https://cisce.org/ போன்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் எஸ்எம்எஸ் மூலமாக கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் தேர்வு முடிவை ஜூலை 31-க்குள் வெளியிடுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது.

Previous articleகர்ப்பமாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடரின் முக்கிய பிரபலம்!! வாழ்த்து கூறும் ரசிகர்கள்!!
Next articleமுன்னழகை காட்டி கிளாமராக போஸ் கொடுத்த ராய் லக்ஷ்மி!! தாறுமாறான கவர்ச்சி!!